திருப்பூரில் ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு; சர்க்கரை, அரிசி தரம் பற்றி பரிசோதித்தார்
திருப்பூரில் ஒரு ரேஷன் கடையில் கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சர்க்கரை, அரிசி தரம் பற்றி பரிசோதித்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 50-ல் தென்னம்பாளையம் ரேஷன் கடையில் கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுவினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சர்க்கரை, அரிசி, கோதுமை, பாமாயில், பருப்பு வகைகள், மின்னணு எடை எந்திரத்தின் செயல்பாடு மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் குறித்து பரிசோதித்தார்.
இதனைத்தொடர்ந்து திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையின் தரம், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள உயிர் காக்கும் மருந்துகள் தொடர்பாக டாக்டர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.
மேலும், டெங்கு காய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவையும் கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு குறித்தும் டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதுபோல் மருத்துவமனை வளாகத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.