கடலூரில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கம், ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்,
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 5 மாதமாக வழங்க வேண்டிய சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். செல்போன் கோபுரங்களுக்கான மின்சார கட்டணத்தை வழங்க வேண்டும், வாடகையை செலுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கம், ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். எஸ்.என்.ஏ. மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மதியழகன், அதிகாரிகள் சங்க மாநில ஆலோசகர் வெங்கடேசன், ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், அதிகாரிகள் சங்கம் பால்கி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.