ராமேசுவரம், பாம்பனில் கனமழை
ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ராமேசுவரத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.;
ராமேசுவரம்,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்தநிலையில் ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்தது. 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் ராமேசுவரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பும் மற்றும் அந்த சாலையை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதுதவிர ராமதீர்த்தம் பகுதி, கோவில் ரத வீதி சாலை, நகராட்சி அலுவலகம் எதிரே தனுஷ்கோடி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தேங்கி நின்ற மழைநீரானது கடலில் கலந்தது.
இதேபோல் பாம்பன், தங்கச்சிமடத்திலும் பலத்த மழை பெய்தது. தங்கச்சிமடத்தில் பெய்த மழையால் பேய்க்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பு குட்டை போன்று மழைநீர் தேங்கியது. பேய்க்கரும்பில் உள்ள பஸ் நிறுத்தம் அருகிலும் சாலையில் மழைநீர் தேங்கியதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். முன்னதாக தங்கச்சிமடத்தில் இடி-மின்னல் காரணமாக வீடுகளில் இருந்து மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.
நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரத்தில் 60.2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. தங்கச்சி மடத்தில் 37.4 மி.மீ., பாம்பன் 40.9 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியே பின்னரே ராமேசுவரம் பகுதியில் மழை பெய்ய தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கடந்த சில தினங்களாகவே மழை பெய்தது. மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.