தெருவியாபார தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட தெருவியாபார தொழிலாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில், புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-09-30 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட தெருவியாபார தொழிலாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில், புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ரெங்கையா தலைமை தாங்கினார். இதில் மாநில பொது செயலாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார். தெருவியாபாரத்தை முறைப்படுத்தல், தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் சட்டம் 2014-ம் ஆண்டு மத்திய சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தெரு வியாபார தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்