காஞ்சீபுரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காஞ்சீபுரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்துகிறார்.;

Update: 2019-09-30 22:30 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் சாமுவேல். இவரது மனைவி சாந்தி (வயது 33). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. சாமுவேல் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் குடும்பத்துக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சாமுவேல் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

அப்போது வீட்டில் மனமுடைந்த நிலையில் தனியாக இருந்த சாந்தி, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே, சாந்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால் காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன் இளம்பெண்ணின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்