தாம்பரம் நகராட்சி பகுதியில் மழைநீர் சேகரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு
தாம்பரம் நகராட்சி பகுதியில் மழைநீர் சேகரிப்பு பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சிக்கு தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று மதியம் வருகை தந்தார். அவருடன் தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகனும் வந்தார்.
தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் கருப்பையாராஜா மற்றும் அதிகாரிகளுடன் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
நகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
அப்போது, தாம்பரம் நகராட்சி பகுதியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. மீதம் உள்ள பணிகளையும் விரைவாக செய்து முடிக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவிட்டார்.
அப்போது அமைச்சர் வேலுமணியிடம், தமிழ்நாடு நகராட்சி அமைச்சு பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு நகராட்சி பொதுப்பணி விதி 1970 நகராட்சிகளின் தரத்திற்கேற்ப பணியிடங்களை மறுசீரமைப்பு மற்றும் தரம் உயர்த்த கோரும் கோரிக்கை மனுவினை மாநில துணைத்தலைவர் கரு.மாரியப்பன், நகராட்சி மேலாளர் எம்.மேகலா மற்றும் பி.ஸ்ரீராம் ஆகியோர் அளித்தனர். அந்த கோரிக்கை தொடர்பாக அரசு முதன்மை செயலர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.