திருமணமான 9 மாதத்தில் டெம்போ டிரைவர் தற்கொலை இரணியல் அருகே பரிதாபம்

இரணியல் அருகே திருமணமான 9 மாதத்தில் டெம்போ டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-30 22:15 GMT
இரணியல்,

இரணியல் அருகே மேல்கரை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 34), டெம்போ டிரைவர். இவ ருக்கும் சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த ரத்தினபாய் (30) என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

அய்யப்பனுக்கு குடிப் பழக்கம் இருந்ததாக கூறப் படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அய்யப்பன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகவும், அதை ரத்தின பாய் கண்டித்ததாகவும் கூறப் படுகிறது. இதனால் கணவன்– மனைவி இடையே தகராறு நடந்தது. அதைத்தொடர்ந்து ரத்தினபாய் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அய் யப்பன் மன வருத்தத் துடன் காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் அய்யப்பன் வி‌ஷம் குடித்து வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மயங்கி கிடந்தார். இதை அக்கம்–பக்கத்தினர் பார்த்தனர். அவர்கள் அய்யப் பனை, குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ் பத்திரியில்  சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யப்பன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் போலீ சார் விரைந்து சென்று அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போ லீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள். திருமணமான 9 மாதத்தில் டெம்போ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்