ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணியிடங்கள்
ரிசர்வ் வங்கி மற்றும் பஞ்சாப் சிந்த் வங்கியில் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 367 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்திய வங்கிகளின் வங்கி எனப்படுவது ரிசர்வ் வங்கி. ஆர்.பி.ஐ. என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வங்கியில் தற்போது அதிகாரி (கிரேடு-பி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 199 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 2019 செப்டம்பர் 1-ந்தேியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
பட்டப்படிப்பு தேர்ச்சிக்குப் பின்பு எம்.பி.ஏ. அல்லது முதுநிலை மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் இடைவிடாமல் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரூ. 850 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் அக்டோபர் 11-ந் தேதியாகும். இந்த பணிகளுக்கான தேர்வு இரு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல்நிலை (தாள்1) தேர்வு நவம்வர் 9-ந் தேதி நடத்தப்படுகிறது. இரண்டாம் நிலை எழுத்துத்தேர்வு (தாள்1,2,3) தேர்வு டிசம்பர் 1,2-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதள பக்கத்தை பார்த்து விட்டு விண்ணப்பிக்கலாம்.