ஊத்தங்கரை அருகே பிரபல திருடன் கைது 115 பவுன் நகைகள் மீட்பு
ஊத்தங்கரை அருகே பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 115 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் கதவணி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒருவர் மோட்டார்சைக்கிளில் சுற்றினார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த பேரணாம்பட்டு பக்கமுள்ள கோட்டாங்கல்லை சேர்ந்த சுதாகர் (வயது35 ), என தெரிய வந்தது. மேலும் இவர் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என தெரிய வந்தது.
கைது
இதையடுத்து பிரபல திருடன் சுதாகரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பதுக்கி வைத்து இருந்த 115 பவுன் தங்க நகை மற்றும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.