தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி போலீசார் விசாரணை

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2019-09-29 22:15 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள வல்லம்புதூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் முருகானந்தம்(வயது19). வாய்பேச முடியாத இவர் வல்லம்புதூரில் இருந்து தஞ்சை -திருச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். முன்னையம்பட்டி பிரிவு சாலை அருகே அவர் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகானந்தம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

பரிதாப சாவு

இதில் படுகாயமடைந்த முருகானந்தத்தை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீனிவாசன் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் மீது மோதி சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள். அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் ஒருவர் இறந்த சம்பவம் வல்லம்புதூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்