பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் - சென்னையை சேர்ந்த 4 பேர் கைது
ஊத்துக்கோட்டை, பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 4 பேர் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 26). இவர் ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் 4 பேர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். அவர்களிடம் முரளி பணம் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் முரளியை தாக்கி, ஓட்டலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மாரியப்பன் (46), எம்.கே.பி.நகரை சேர்ந்த இளமாறன் (31), வள்ளலார் நகரை சேர்ந்த விஜயகுமார் (44) எழும்பூரை சேர்ந்த குமரேசன் (23) என்பது தெரியவந்தது. பின்னர் 4 பேரையும் போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.