அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை காரைக்குடி வருகை
அழகப்பா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை காரைக்குடிக்கு வருகிறார்.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.15 மணிக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- அழகப்பா பல்லைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக கவர்னரும், அழகப்பா பல்கலைக்கழக வேந்தருமாகிய பன்வாரிலால் புரோகித் காரைக்குடிக்கு நாளை வருகிறார். அவர் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமாகிய அன்பழகன் வாழ்த்துரை வழங்குகிறார். சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தர் மூர்த்தி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் வரவேற்புரை நிகழ்த்துகிறார். விழாவில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 80, இணைப்புக் கல்லூரிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 20, இணைவு கல்வி திட்டத்தின் கீழ் 1062, தொலைநிலை கல்வி இயக்கத்தின் வாயிலாக பயின்ற 12 ஆயிரத்து 646 மாணவ-மாணவிகள் தங்களது பட்டங்களை நேரிடையாக பெறுகின்றனர்.
இவர்களில் ஒருவர் டாக்டர் ஆப் சயின்ஸ் (டி.எஸ்.சி.) பட்டமும், 169 பேர் முனைவர் பட்டமும், பல்கலைக்கழகத்தை சேர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த 35 பேர் ஆய்வியல் நிபுணர் பட்டமும், 37 பேர் முதுநிலை பட்டமும், 8 பேர் இளநிலை பட்டமும், பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளை சேர்ந்த 8 பேர் ஆய்வியல் நிபுணர் பட்டமும், 20 பேர் முதுநிலை பட்டமும், 29 பேர் இளநிலை பட்டமும், பல்கலைக்கழக இணைவு கல்வி திட்டத்தின் கீழ் 8 பேர் முதுநிலை பட்டமும், 10 பேர் இளநிலை பட்டமும் பெறுகின்றனர்.
நேரில் பட்டம் பெறும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆய்வியல் நிபுணர் 8 பேருக்கும், முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்களில் 21 பேருக்கும், இணைப்பு கல்லூரிகளை சேர்ந்த இளநிலை பட்டப்படிப்பு மாணவர் ஒருவருக்கும் முதல் தரச்சான்றிதழுடன், தங்கப்பதக்கமும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பல்கலைக்கழக பதிவாளர் குருமல்லேஷ்பிரபு உடனிருந்தார். பட்டமளிப்பு விழாவிற்கு முன்னதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.16.50 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள 7 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.