திருப்பூரில் வாலிபரிடம் செல்போன் பறிக்க முயன்ற 2 பேர் கைது
திருப்பூரில் வாலிபரிடம் செல்போன் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் அருகே நேற்றுகாலை 6 மணிக்கு ராயபுரத்தை சேர்ந்த விக்டர் ஆரோக்கியராஜ் (வயது 35) என்பவர் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, விக்டர் ஆரோக்கியராஜிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர்.
இதனால் சுதாரித்துக்கொண்ட அவர் விலகினார். தொடர்ந்து திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். கூச்சலிட்டதும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடினர். அவர்கள் செல்போன் வழிப்பறியில் ஈடுபட முயன்றவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து 2 பேரையும் பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு விசாரணை நடத்தியதில் செல்போன் பறிப்பில்ஈடுபட்டது எஸ்.பெரியாயிபாளையத்தை சேர்ந்த ராகுல் (23), நல்லூரை சேர்ந்த சஞ்சய் (25), ஆகிய 2 பேர் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும், ஒரு செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒரே நாளில் செல்போன் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.