சிங்காநல்லூரில், சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.;

Update: 2019-09-27 21:45 GMT
பீளமேடு,

கோவை சிங்காநல்லூரில் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சாலை மற்றும் எதிர்புறம் உள்ள ஹவுசிங் யூனிட் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன் கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நேரடியாக வந்து சாலையோரம் உள்ள பகுதிகளை அளந்து, விதிமீறி ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றும்படி கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தனர். மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால் இதுவரை அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் எதுவும் அகற்றப்படாத காரணத்தால், நேற்று காலை 11 மணியளவில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். முதல் கட்டமாக கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு எதிரில், ஹவுசிங் யூனிட் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்