மும்பையில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் அதிகரிப்பு

மும்பை போக்குவரத்து போலீசார் நடப்பாண்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது எடுத்த நடவடிக்கைள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

Update: 2019-09-27 23:00 GMT
மும்பை,

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் மும்பையில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. நடப்பாண்டில் கடந்த 8 மாதத்தில் (ஆகஸ்டு வரை) செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 26 ஆயிரத்து 588 பேர் பிடிபட்டுள்ளனர். கடந்த ஆண்டு முழுவதும் 26 ஆயிரத்து 241 பேர் மட்டுமே செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக சிக்கியிருந்தனர்.

இதேபோல நடப்பாண்டில் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டியதாக 2 லட்சத்து 58 ஆயிரத்து 626 பேர் பிடிபட்டுள்ளனர். கடந்த ஆண்டு 1 லட்சத்து 21 ஆயிரத்து 142 பேர் மட்டுமே சிக்கியிருந்தனர். இதேபோல நடப்பாண்டு சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக 20 ஆயிரத்து 77 பேர் (கடந்த ஆண்டு 17,972) சிக்கி உள்ளனர். போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் கருத்தரங்குகள் நடத்த உள்ளதாக போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் மதுக்கர் பாண்டே கூறினார்.

மேலும் செய்திகள்