சாலையில் சென்று கொண்டிருந்த போது மினிபஸ் எரிந்து நாசம்; பேட்டரி வயரில் தீப்பற்றியதால் விபத்து
சுவாமிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது பேட்டரி வயரில் தீப்பற்றியதால் மினிபஸ் முற்றிலும் எரிந்து நாசமடைந்தது.
கபிஸ்தலம்,
கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக திருவலஞ்சுழி பட்டீஸ்வரம் செல்லும் மினி பஸ் நேற்று மதியம் 12.10 மணி அளவில் கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. சுவாமிமலையில் காவிரி ஆற்றின் பாலத்தில் மினி பஸ் பயணிகளை ஏற்றி இறக்க நின்றது. அப்போது மினி பஸ்சில் இருந்த பேட்டரி வயரில் திடீரென தீப்பிடித்து பஸ்சில் தீ பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். உடனே டிரைவர், கண்டக்டர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்து அலறியடித்துக்கொண்டு இறங்கினர். பஸ்சின் பேட்டரியில் பற்றிய தீ டீசல் டேங்கில் பரவியதால் பஸ் முழுவதும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மினிபஸ் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் மினிபஸ் முழுவதும் எரிந்து நாசமடைந்தது. தீயில் எரிந்து நாசமடைந்த மினிபஸ்சின் மதிப்பு ரூ.15 லட்சம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் மினிபஸ் டிரைவர் திருவிடைமருதூர் தாலுகா காட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்திவேல்(வயது32), கண்டக்டர் கூகூர் பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் ரவி(30) ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமடைந்த சம்பவம் சுவாமிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.