உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்தபோது கைதான விவசாயிகள் சங்க தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்; குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முறையீடு
உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்தபோது கைதான விவசாயிகள் சங்க தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கலெக்டருக்கு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
பின்னர் உடுமலையில் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் கூட்டத்தை நடத்தினார். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்து பேசினார்கள்.
கூட்டத்தில் மதுசூதனன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) பேசியதாவது:-
தாராபுரம் இச்சிப்பட்டி கிராமத்தில் பெரிய மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மின் நிலையத்துக்கு 30-க்கும் மேற்பட்ட உயர்மின் அழுத்த பாதைகள் மற்றும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த பாதைகள் அமைக்கும்போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கேபிள் மூலமாக மின்பாதைகள் அமைக்க வேண்டும். உயர்மின்பாதை செல்லும் நிலத்துக்கும், உயர்மின் கோபுரங்கள் இருக்கும் இடத்துக்கும் மாத வாடகை வழங்க வேண்டும் என போராட்டங்கள் நடந்து வருகிறது.
தாராபுரம் அருகே பெல்லம்பட்டி, கிழக்கு சடையபாளையம், மானூர்பாளையம், மேற்கு சடையபாளையம் ஆகிய ஊர்களில் மின்பாதை அமைக்க சட்டபூர்வமான நடைமுறைகளை கடைபிடிக்காமல், கலெக்டரின் அனுமதியின்றி விவசாய நிலங்களில் நூற்றுக்கணக்கான போலீசாருடன் கடந்த 13-ந் தேதி நுழைந்து வேலை செய்துள்ளனர்.
இது சட்டவிரோதமானது என்று கூறிய விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் இரவு வரை காவலில் வைத்து பின்னர் விடுதலை செய்தனர். ஆனால் விவசாய சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஈசன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சண்முகசுந்தரம் உள்பட 5 பேரை மட்டும் வெளியே வர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு விவசாயிகள் சங்கங்களின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
விவசாய சங்க தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும். காவல்துறையை பயன்படுத்தி உயர்மின் கோபுரம் அமைத்துவிடலாம் என்பதை கைவிட்டு, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் உள்ளனர். கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால் அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு போதுமான டாக்டர்கள், பணியாளர்கள் இல்லாததால் தனியார் மருத்துவர்களை தேடி செல்கிறார்கள். ஊத்துக்குளி கால்நடை மருந்தகம், புஞ்சை தளவாய்பாளையம், பாப்பம்பாளையம் கால்நடை மருந்தகத்தில் காலிப்பணியிடம் உள்ளது. அதை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊத்துக்குளி பகுதியில் விவசாயிகளின் மின்மோட்டார் மற்றும் கால் நடைகள் அதிக அளவில் திருட்டு போகிறது. அதை தடுக்க வேண்டும்.
உடுமலை பகுதியில் மக்காச்சோளம் பயிரிட தயாராக உள்ளனர். வீரிய ஒட்டுரக மக்காச்சோளம் விதை கிடைக்க வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
உடுமலை பகுதியில் 600 டன் யூரியா உரம் விவசாயிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு ரூ.60 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த உரத்தை சிலர் கேரளாவுக்கு விற்பனை செய்து விட்டதாக புகார் தெரிவிக்கிறார்கள். தனிப்பட்ட நபரின் தலையீட்டால் இந்த விற்பனை நடந்துள்ளதாக கூறுகிறார்கள். எனவே இதில் கலெக்டர் தலையிட்டு, விரிவான விசாரணை நடத்தி வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும். உழவர் செயலியில் தகவல்களை பெற முடியவில்லை. அதிகாரிகளின் செல்போன் எண்கள் தவறாக உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈஸ்வரமூர்த்தி(உழவர் உழைப்பாளர் கட்சி):-
அமராவதி அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றுள்ளது. தற்போது தாராபுரம் பகுதியில் மழை பெய்து வருவதால் அணையில் திறந்து விடும் தண்ணீர் அளவை குறைத்து சரியான முறையில் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு வெட்டிய 90 நாட்களுக்குள் அதற்கான தொகை வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி பிறகு பணம் வழங்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு அமராவதி சர்க்கரை ஆலை மேம்பாட்டு அதிகாரி பதில் அளித்து பேசும்போது, 2018-19-ம் ஆண்டில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 700 டன் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது. இதில் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி வரை 84 ஆயிரத்து 600 டன் கரும்புக்கு ரூ.23 கோடியே 24 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.14 கோடியே 58 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டியிருக்கிறது.
இதுகுறித்து கூட்டுறவு துறைக்கு தெரிவிக்கப்பட்டு விரைவில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் பணம் கரும்பு விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்படும் என்றார்.
கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கொங்கு ராஜாமணி பேசும்போது, உயர்மின் கோபுரம், விவசாய நிலங்கள் வழியாக அமைக்கும்போது ஒரு தென்னை மரத்துக்கு ரூ.32 ஆயிரத்து 400 இழப்பீடு என்பதை ரூ.36 ஆயிரம் என்றும், மின்கம்பிகள் செல்லும் நிலத்துக்கு நிலமதிப்பில் இருந்து 15 சதவீத இழப்பீடு என்பதை 20 சதவீதமாக அதிகரித்தும், உயர்மின் கோபுர தூண்கள் உள்ள நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது என்றும் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் அரசாணை வர உள்ளதால், அந்த அரசாணை வந்த பிறகு விவசாயிகளிடம் நிலத்தை பெற்று அதற்கு தகுந்த இழப்பீடு தொகையை வழங்கினால் வசதியாக இருக்கும் என்றார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரபு, வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஆனந்தகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கையை பார்வையிடுவதற்காக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 25-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று குறை தீர்ப்பு கூட்ட அரங்கில் அமர்ந்து கவனித்தனர்.