மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு அழைக்காததால் தண்ணீர் கேன் வியாபாரி தற்கொலை

சென்னை நுங்கம்பாக்கம் , மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு அழைக்காததால் தண்ணீர் கேன் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-26 23:00 GMT
சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் பாடிமுத்து தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவரது மனைவி இந்துமதி (36). இவர்களுக்கு தருணா என்ற மகள் உள்ளார். சுதாகருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்துமதி தனது மகளுடன், திருவொற்றியூரில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்துமதி தனது மகளுக்கு, திருவொற்றியூரில் பூப்புனித நீராட்டு விழா நடத்தினார். இந்த விழாவுக்கு இந்துமதி தனது கணவரை அழைக்கவில்லை. தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை காணமுடியவில்லையே என நினைத்து சுதாகர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுதாகர், தனது வீட்டில் மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்