குடிமராமத்து திட்டத்தின் கீழ் விடுபட்ட தூர்வாரும் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் அமைச்சர் பேட்டி

குடிமராமத்து திட்டத்தின் கீழ் விடுபட்ட தூர்வாரும் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

Update: 2019-09-26 23:15 GMT
நாகப்பட்டினம்,

விவசாயிகள் பயிர்க்காப்பீட்டு இன்சூரன்ஸ் தொகை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க சில திருத்தங்கள் செய்ய வேண்டும். இதனால் விவசாயிகளின் கருத்துகள் குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பயிர்க்காப்பீட்டு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை செலுத்திய 81 ஆயிரத்து 308 விவசாயிகளில் 76 ஆயிரத்து 984 விவசாயிகளுக்கு இதுவரை ரூ.184 கோடியே 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

மீதமுள்ள 27 ஆயிரத்து 200 விவசாயிகளுக்கு கூடிய விரைவில் பயிர்க்காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்சூரன்ஸ் தொகை குறித்து விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை. குடிமராமத்து திட்டத்தின் கீழ் விடுபட்ட தூர்வாரும் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். டெல்டா பகுதிகளில் மழை பெய்து வருவதால் களை குறைந்து நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் பிரவீன் பி.நாயர், வருவாய் அலுவலர் இந்துமதி, சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்