ஆரல்வாய்மொழி அருகே சுவரில் டெம்போ மோதி டிரைவர் பலி

ஆரல்வாய்மொழி அருகே டெம்போ, காம்பவுண்டு சுவரில் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2019-09-26 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் கண்டன்குழியை சேர்ந்தவர் அம்பேத்கார் (வயது 41), டெம்போ டிரைவர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அம்பேத்கார் நேற்று முன்தினம் இரவு அருமநல்லூரில் இருந்து டெம்போவில் பாறை கற்களை ஏற்றிக்கொண்டு நெல்லை மாவட்டம் கூடங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பகுதியில் சென்ற போது, டெம்போ திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையோரம் இருந்த காம்பவுண்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

பரிதாப பலி

இதில் டெம்போவின் முன்பகுதி நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய அம்பேத்கார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அம்பேத்காரின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்