நாகர்கோவிலில் கொட்டி தீர்த்த கனமழை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
நாகர்கோவிலில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு நாகர்கோவிலில் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1½ மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்தால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் பழையாறு, வள்ளியாறு, பரளியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும், கால்வாய்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாகர்கோவிலில் உள்ள குமரி அணை, சபரி அணை, சோழன்திட்டை அணை உள்ளிட்ட தடுப்பணைகள் அனைத்திலும் மறுகால் பாய்கிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. குமரியின் குற்றாலம் எனப்படும் திற்பரப்பு அருவியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மழை அளவு
மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை- 14.6, பெருஞ்சாணி- 27.4, சிற்றார் 1- 8.6, சிற்றார் 2- 6, பொய்கை- 7.4, மாம்பழத்துறையாறு- 43, முக்கடல்- 20, பூதப்பாண்டி- 16.4, களியல்- 7, கன்னிமார்- 14.2, கொட்டாரம்- 10, குழித்துறை- 29.6, மயிலாடி- 15.2, நாகர்கோவில்- 34.8, சுருளக்கோடு- 51.4, தக்கலை- 29, குளச்சல்- 32.8, இரணியல்- 28.6, ஆரல்வாய்மொழி- 7.4, கோழிப்போர்விளை- 4.2, அடையாமடை- 53, குருந்தங்கோடு- 27.4, முள்ளங்கினாவிளை- 16, ஆனைக்கிடங்கு- 42.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
நீர்வரத்து
மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 392 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 123 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 576 கன அடி தண்ணீர் வருகிறது. தொடர் மழையால் இந்த அணை நேற்று மூடப்பட்டது.
சிற்றார்-1 அணைக்கு 189 கன அடி வருகிறது. சிற்றார்-2 அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. மாம்பழத்துறையாறு அணைக்கு 4 கன அடி தண்ணீர் வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 11 அடியாக உள்ளது. அணைக்கு 4 கன அடி தண்ணீர் வருகிறது. குடிநீருக்காக 7.42 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.