பரேலில் ரெயில் என்ஜின் பணிமனை இழுத்து மூடல்; 715 ஊழியர்கள் இடமாற்றம்
பரேலில் ரெயில் என்ஜின் பணிமனை இழுத்து மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய 715 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை பரேலில் மத்திய ரெயில்வேக்கு சொந்தமான ரெயில் என்ஜின் பணிமனை செயல்பட்டு வந்தது. இந்த பணிமனை 139 ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்கு 4 ஆயிரம் பேர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இ்ந்தநிலையில் அங்குள்ள பணிமனையை அகற்றிவிட்டு புதிதாக பரேல் டெர்மினல் தொடங்க பணிகள் நடந்து வந்தது. இதையடுத்து என்ஜின் பணிமனையை அமராவதி அருகே உள்ள பட்நேராவிற்கு மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி கடந்த 23-ந்தேதி பணிமனை இழுத்து மூடப்பட்டது. மேலும் அங்கு பணியாற்றிய 715 ஊழியர்கள் பட்நேராவிற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.