கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஒகளூர் கிராம மக்கள் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களில் சிலரை கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கை தொடர்பான மனுவினை கொடுத்து விட்டு வருமாறு உள்ளே அனுமதித்தனர்.
ஒகளூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், சு.ஆடுதுறை குற்றம் பொருத்தவர் கோவிலுக்கு சொந்தமான இலுப்பை தோப்பு என்கிற இடம் ஒகளூர் கிராமத்தில் உள்ளது. அந்த இடத்தை தற்போது ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே கலெக்டர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ஆரம்ப சுகாதாரநிலையம்
மேலும் அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பஸ் பணிமனை, நெல் கொள்முதல் நிலையம், தீயணைப்பு நிலையம், மகளிர் சுய உதவி குழுக்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை, அரசு பால் சுத்திகரிப்பு நிலையம், குழந்தைகள் பொழுது போக்கு பூங்கா, நூலகம் ஆகியவை ஒகளூர் கிராமத்திற்கு வர உள்ளது. எனவே அதனை அமைக்க கோவிலுக்கு சொந்தமான இடத்தை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தினால் ஒகளூர் கிராமம் மேலும் வளர்ச்சியடையும் என்றனர்.