மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து மெக்கானிக் பலி
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து மெக்கானிக் பலியானார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள கொடுவெளி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 35). மெக்கானிக். நேற்று முன்தினம் மாலை பிரபு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்றார்.
திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் பூச்சி அத்திப்பட்டு கிராமம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பிரபுவை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். இவருக்கு குஷ்பு என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர்.
விபத்து குறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.