கழிவுநீர் கலப்பதால் பாதிப்பு; நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் மீன்கள் செத்து மிதந்தன
நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் மீன்கள் திடீரென்று செத்து மிதந்தன. கழிவுநீர் கலப்பதால் பாதிப்பு ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
அரியாங்குப்பம்,
அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பத்தில் சுண்ணாம்பாறு உள்ளது. இங்கு அரசு சார்பில் படகு குழாம் இயங்குவதால் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த ஆறு மீன்பிடி தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது.
இந்த ஆற்றின் ஒருபகுதியில் படுகை அணையும், மற்றொரு பகுதியில் முகத்துவாரமும் அமைந்துள்ளது. அதனால் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சுண்ணாம்பாற்றின் தண்ணீர் பச்சை, செம்மண் நிறமாக மாறியது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு சில மீன்கள் செத்து மிதந்தன. இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நேற்று திடீரென்று அதிக அளவில் மீன்கள், இறால், நண்டுகள் செத்து மிதந்தன. இதை பார்த்த படகு குழாம் ஊழியர்கள், மீன்பிடிக்க சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மீன்கள் செத்து கிடந்ததால் ஆற்றின் தண்ணீர் துர்நாற்றம் வீசியது. அந்த மீன்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த ஆற்றில் மருத்துவ கழிவுகள், கழிப்பிட கழிவுகள், ரசாயன கழிவுநீர் ஆகியவை கலப்பதால் தண்ணீர் மாசு ஏற்பட்டு உள்ளது. இதன் பாதிப்பால் தான் மீன்கள், நண்டுகள் செத்து கிடப்பதாக அந்த பகுதி மக்கள், மீனவர்கள் தெரிவித்தனர்.
சுண்ணாம்பாற்றின் தண்ணீரை மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.