மராட்டிய சட்டசபை தேர்தல் விழிப்புணர்வு தூதராக நடிகை மாதுரி தீக்சித் நியமனம்

மராட்டிய சட்டசபை தேர்தல் விழிப்புணர்வு தூதராக நடிகை மாதுரி தீக்சித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2019-09-25 00:18 GMT
மும்பை, 

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், மராட்டிய சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதன்படி அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தெருமுனை பிரசார வாகனத்தை மும்பையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில், தேர்தல் ஆணையம் வாக்குரிமை குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் நல்லெண்ண தூதராக இந்தி நடிகை மாதுரி தீக்சித்தை நியமனம் செய்து உள்ளது.

அதன்படி ‘ஓட்டு போடலாம்’ என்ற பெயரில் மாதுரி தீக்சித் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்யும் வீடியோ பொதுமக்கள் மத்தியில் காண்பிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்