திண்டுக்கல்லில், இந்து அமைப்பினர் எதிர்ப்பால் கார்த்தி படப்பிடிப்பு நிறுத்தம் - போலீஸ் குவிப்பு-பரபரப்பு
திண்டுக்கல்லில் இந்து அமைப்பினர் எதிர்ப்பால் கார்த்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் மலைக்கோட்டையில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. இது தொல்லி யல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மலைக் கோட்டையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங் கப்படுகிறது. இங்கு கடந்த சில நாட்களாக இங்கு ஹைதர் அலியின் வாழ்க்கை வர லாற்றை மையமாக கொண்டு ‘திப்பு சுல்தான்’ என்ற பெயரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று இரவில் படப்பிடிப்பு நடை பெறுவதாக தகவல் பரவியதை தொடர்ந்து இந்து அமைப்பு களை சேர்ந்தவர்கள் மலைக் கோட்டைக்கு சென்றனர். அங்கு படப்பிடிப்பு நடந்த போது சிலர் மது அருந்தி கொண்டு இருந்ததாக கூறப் படுகிறது. இதை கண்டித்து இந்து முன்னணி, பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலைக்கோட்டையை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இத னால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி மாறன் தலைமையிலான போலீசார் மலைக்கோட்டை யில் குவிக்கப்பட்டனர். பின்னர் இந்து அமைப்பு களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மலைக்கோட்டை யில் படப் பிடிப்பு நடந்தபோது மது அருந்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்து அமைப்புகள் புகார் கூறினர்.
இதுகுறித்து விசாரணை நடத்துவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு தெரிவித்தார். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு இந்து அமைப்பு களை சேர்ந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.