டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி: ஜான்குமார் திடீர் ராஜினாமா, தேர்தலில் போட்டியா?
புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை ஜான்குமார் திடீரென ராஜினாமா செய்தார்.
புதுச்சேரி,
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜான்குமார். அப்போது முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நாராயணசாமி எம்.எல்.ஏ.வாக இல்லாததால் அவருக்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ஜான்குமார் ராஜினாமா செய்தார்.
அதன்பின் நெல்லித்தோப்பு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி எம்.எல்.ஏ. ஆனார். இதையொட்டி ஜான்குமாரை கவுரவிக்கும் விதமாக அவருக்கு புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது.
இந்தநிலையில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காமராஜ் நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட ஜான்குமார் வாய்ப்பு கேட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் கேட்டு அவர் விருப்பமனு தாக்கல் செய்தார். நேர்காணலிலும் பங்குகொண்டார். இந்தநிலையில் புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை அவர் திடீரென ராஜினாமா செய்தார். எனவே அவர் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.