விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் வானதி சீனிவாசன் பேட்டி
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
திருச்சி,
இந்தியாவில் விவசாயம், தொழில் உள்ளிட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசின் செயல்பாடுதான் காரணம். எனவே, தற்போதைய பொருளாதார வீழ்ச்சி பற்றி விமர்சிக்கும் தகுதி காங்கிரசுக்கு கிடையாது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவில் இருந்து விடுபட கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைத்து பல சலுகைகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன் விளைவாக பங்குசந்தை நிலவரம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. மேலும் வங்கிகளில் கடன் பெற எளியை வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பணப்புழக்கம் சாதாரண மக்கள் கைகளிலும் கிடைக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, பணப்புழக்கம் இல்லை என்ற நிலை விரைவில் மாற்றப்படும்.
வருகிற அக்டோபர் முதல் மற்றும் 2–ம் வாரங்களில் இந்தியாவில் 400 மாவட்டங்களில் வங்கிகள் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. மேலும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் நேரடியாக கடன் உதவி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்பு நடக்கும் கடன் முகாம் மூலம் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைக்கு கடன் பெற்று பொதுமக்கள் பயன்பெறலாம்.
அ.தி.மு.க. வெற்றி பெறும்
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் நூலிழையில் பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை இதுவரை முடிவெடுக்கவில்லை. கூட்டணி கட்சியான அ.தி.மு.க. நிச்சயம் இரு தொகுதிகளிலும் வெற்றிபெறும்.
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் யார்? என்பதை தேசிய தலைமை முடிவெடுக்கும். தமிழகத்தில் தலைவர் இல்லை என்றாலும், பாரதீய ஜனதாவின் கட்சிப்பணிகள் வழக்கம்போல நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தி.மு.க. வாபஸ் ஏன்?
தமிழ்நாட்டில் இந்தி மொழியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்ப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி உள்ளார். பாரதீய ஜனதா கட்சி எந்த இடத்திலும் கட்டாயம் இந்தி மொழியை கற்க வேண்டும் என சொல்லவில்லை. புதிய கல்வி கொள்கையில் 5–ம் வகுப்புவரை தாய்மொழி கல்வியில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் வருகிறது. தி.மு.க.வை பொறுத்தவரை இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்தி மொழிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் போராட்டம் அறிவித்து விட்டு திடீரென வாபஸ் பெற்றார். அதற்கு காரணம், இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவு இல்லை என்பதுதான். அரசு ஒரு திட்டத்தை அறிவித்தால், அதற்கு கருத்து சொல்ல நாட்டில் பஞ்சம் இல்லை. சி.பி.எஸ்.இ. கல்வி முறைக்கு இணையான கல்வி தமிழ்நாட்டில் இல்லை என்பதால் கல்வித்தரம் குறைவதாக கவலை கொள்கிறார்கள். அதே கல்வியில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டும் எதிர்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.