இந்தியன் வங்கியில் குறைந்த வட்டியில் கடன்: பொது மேலாளர் தேவராஜ் தகவல்

இந்தியன் வங்கி சார்பில் வீடு, வாகனம் வாங்குவதற்கும், சிறு-குறு தொழில் தொடங்கவும் கடன் வழங்கும் நிகழ்ச்சி பெங்களூரு மல்லேசுவரத்தில் நேற்று நடந்தது.

Update: 2019-09-23 22:54 GMT
பெங்களூரு, 

இந்தியன் வங்கியின் பொது மேலாளர் தேவராஜ்  இந்த நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்து 50 பேருக்கு சுமார் ரூ.100 கோடிக்கு கடன் வழங்குவதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் 2,900 கிளைகள் உள்ளன. பெங்களூரு மண்டலத்தில் 63 கிளைகள் இருக்கின்றன. இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் வங்கிகளில் இந்தியன் வங்கியும் ஒன்று. வீடு, வாகனம் வாங்க விரும்புபவர்கள் மற்றும் சிறு-குறு தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு நாடு முழுவதும் இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விழாக்கால சலுகையாக வங்கியில் இருந்து கடன் பெறும் வசதி அடுத்த ஆண்டு(2020) ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதில் கடன் பெறுபவர்களுக்கு பரிசீலனை கட்டணம் கிடையாது. குறைந்த வட்டி மட்டும் உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் பெங்களூரு மண்டல மேலாளர் லட்சுமி நாராயணா, மண்டல துணை மேலாளர் கிருஷ்ணா ரெட்டி உள்பட அதிகாரிகள், கிளை மேலாளர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்