சேலம் மேற்கு தொகுதியில் ரூ.2.12 கோடியில் புதிய தார்சாலை அமைக்க பூமிபூஜை

சேலம் மேற்கு தொகுதியில் ரூ.2.12 கோடியில் புதிய தார்சாலை அமைக்க பூமிபூஜை நடத்தப்பட்டது.

Update: 2019-09-23 23:15 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சி 19 மற்றும் 21-வது வார்டுகளுக்கு உட்பட்ட கென்னடி தெரு, ஆசாத் தெரு, இளையப்பா நகர், சோளம்பள்ளம், மாரியம்மன் கோவில் தெரு, அரியாகவுண்டம்பட்டி கீழ் தெரு, துரைய கவுண்டர் வட்டம் ஆகிய பகுதிகளில் புதிதாக தார்சாலை மற்றும் பேவர் பிளாக் கற்கள் அமைக்க சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடியே 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி சூரமங்கலம் பழனியப்பா நகரில் நடந்தது. இதில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டு புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூஜை செய்து தொடங்கி வைத்தார். சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஒரேநாளில் ரூ.2.12 கோடி செலவில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், மாநகராட்சி பொறியாளர் அசோகன், அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் ராம்ராஜ், கர்ணன், மாநகர துணை செயலாளர் பாலு, நிர்வாகிகள் செங்கோட்டையன், தங்கராஜ், தேவூது, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், அன்பு செல்வி, பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்