சேலம் அழகாபுரத்தில் அழகு நிலைய பெண் ஊழியர் மர்ம சாவு

சேலம் அழகாபுரத்தில் அழகு நிலைய பெண் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2019-09-23 21:48 GMT
சேலம்,

சேலம் அழகாபுரத்தில் அழகு நிலைய பெண் ஊழியர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் அழகாபுரம் பகுதியில் ஏராளமான அழகு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அத்வைத ஆசிரம ரோட்டில் உள்ள பெண்கள் அழகு நிலையம் ஒன்றில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த எஸ்தர் (வயது 28) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு எஸ்தர் தனது சக ஊழியர்கள் 3 பேருடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார்.நேற்று காலை நீண்ட நேரமாகியும் எஸ்தர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அவரை சக ஊழியர்கள் எழுப்பியபோது அசைவற்ற நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் எஸ்தரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து எஸ்தர் மர்ம சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அழகுநிலைய உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், எஸ்தர் சாவுக் கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும் என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்