கிருஷ்ணகிரியில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் தொழிலாளி கைது
கிருஷ்ணகிரியில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வி.மாதேப்பள்ளி மேலூர் பகுதியை சேர்ந்த சாரதி (வயது 25) என்ற பேக்கரி கடை தொழிலாளி அங்கு வந்தார். பின்னர் அவர் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து வீட்டிற்குள் சென்றார்.
அவர் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
தொழிலாளி கைது
இது குறித்து அப்பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளி சாரதியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.