காமராஜ் நகர் தொகுதியில் எந்த கட்சி போட்டியிட்டாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
காமராஜ் நகர் தொகுதியில் எந்த கட்சி போட்டியிட்டாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி,
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடம் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதில் புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட 11 பேர் விருப்பமனு அளித்தனர். அவர்களுக்கான நேர்காணல் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 11 மணியளவில் கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம், முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நேர்காணல் நடத்துகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்ய மாநில தலைவர் நமச்சிவாயம், முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் நாளை (புதன்கிழமை) டெல்லி செல்கின்றனர். அங்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கூறுகையில், காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சி தலைமை அறிவிக்கும். இந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் என எந்த கட்சி போட்டியிட்டாலும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.