மருத்துவ மாணவர் ஆள்மாறாட்டம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை
மருத்துவ மாணவர் ஆள்மாறாட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை,
பின்னர் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க பொது செயலாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் செய்தியாளர்களிடம கூறியதாவது:-தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை திரும்ப பெற வேண்டும். எம்.பி.பி.எஸ் முடித்த பிறகு புகுத்தப்படும் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
மருத்துவத்துறையில் மூட நம்பிக்கையை புகுத்துவதை நிறுத்த வேண்டும். நவீன அறிவியல் மருத்துவத்தை வளர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அளவில் நவம்பர் 10-ந் தேதி சென்னையில் மாநாடு நடக்க உள்ளது. தமிழக அரசு இது குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ மாணவர்கள், பயிற்சி மாணவர்கள் மனித உரிமை மீறலுக்கு உள்ளாகின்றனர். தொடர்ச்சியாக 24 மணி நேரம் முதல் 36 மணி நேரம் பணி செய்யும் நிலை உள்ளது. இதர மருத்துவ பணியாளர்கள் செய்யக்கூடிய பணிகளும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மீது சுமத்தி கூடுதல் பணிச்சுமை வழங்கப்படுகிறது.
விடுமுறை வழங்கப்படுவதில்லை. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யக்கூடிய நிலை உள்ளது. இதற்கு தமிழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் பணிச்சுமையால் மருத்துவ சேவையின் தரம் பாதிக்கப்படுகிறது. நீட் தேர்வில் தமிழகத்தில் கடும் கெடுபிடி காட்டப்படுகிறது. ஆடைகள், செருப்பு முதல் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. ஆனால் வட மாநில பகுதிகளில் வேறொரு நபரே ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதும் நிலை உள்ளது.
அதில் ஒரு மாணவர் மட்டுமே ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக கூறியதை ஏற்க முடியாது. பலரும் இதுபோல் செய்திருக்கலாம். அதிகாரிகள் உள்பட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம். எனவே நாடு முழுவதும் இந்த ஆண்டு மருத்துவர் மாணவர் சேர்க்கை சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். இந்த பிரச்சினையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை சரி என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. 2017-2018-ம் ஆண்டுகளில் எம்.டி., படிப்பிலும் வினாத்தாளை ஹேக் செய்தது, ஆள்மாறாட்டம் செய்தது என டெல்லி போலீசார் சிலரை கைது செய்தனர். இருப்பினும் தொடர்ந்து இதுபோல் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.