வாடகையை மீண்டும் உயர்த்தக்கோரி: கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் - 50 பேர் கைதாகி விடுதலை
வாடகையை மீண்டும் உயர்த்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 50 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர்,
அதிக அபராதம் விதிக்கப்படுவதால் இனிமேல் அதிக பாரம் ஏற்ற மாட்டோம். கன்டெய்னர் லாரிகளுக்கு உரிய வாடகையை நிர்ணயிக்கவேண்டும் எனக்கூறி கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 16-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 21 சங்கங்கள் பங்கேற்றன.
இதனால் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் தேங்கியதால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிப்புக்குள்ளானது. துறைமுகங்களுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி தலைமையில், கன்டெய்னர் லாரி உரிமையாளர்களுடன் கடந்த 21-ந்தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் 20 அடி கன்டெய்னருக்கான வாடகை 2,500 ரூபாயில் இருந்து ரூ.3,500 ஆகவும், 40 அடி கன்டெய்னருக்கு ரூ.3,500-ல் இருந்து ரூ.4,500 ஆகவும் வாடகையை உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர்.
இந்தநிலையில் தமிழக டிரைலர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரபாகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர், சென்னை துறைமுக நுழைவு வாயில் முன்பு நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், கன்டெய்னர் லாரிகளுக்கு தற்போது உயர்த்தப்பட்ட வாடகை உயர்வு தங்களுக்கு கட்டுப்படியாகாது, மேலும் வாடகையை உயர்த்த வேண்டும் எனவும், தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி ஒரு பிரிவினருக்கு மட்டும் சாதமாக செயல்பட்டதாக கூறி துறைமுகத்தின் உள்ளேயும், வெளியேயும் மற்ற கன்டெய்னர் லாரிகள் செல்லக்கூடாது என்று சாலையில் படுத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கன்டெய்னர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான அனைவரையும் மாலையில் விடுதலை செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.