பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் துறைமுக வழித்தடத்தில் சேவை ரத்து

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துறைமுக வழித்தடத்தில் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-09-21 23:02 GMT
மும்பை,

மத்திய ரெயில்வேயின் முல்லுண்டு - மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே காலை 10.37 மணி முதல் பிற்பகல் 3.06 மணி வரை விரைவு ரெயில்கள் அனைத்தும் திவா - பரேல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். அப்போது இந்த ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இதனால் அனைத்து ரெயில்களும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.

சேவை ரத்து

துறைமுக வழித்தடத்தில் காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை குர்லா - வாஷி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.08 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கும், காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் சி.எஸ்.எம்.டி. - குர்லா, வாஷி - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வே...

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இன்று காலை 10.35 மணி முதல் பிற்பகல் 2.35 மணி வரை மும்பை சென்டிரல் - மாட்டுங்கா ரோடு இடையே விரைவு ரெயிலின் இருவழிப்பாதைகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இந்த நேரத்தில் விரைவு ரெயில்கள் அனைத்தும் சாந்தாகுருஸ் - மும்பை சென்டிரல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்