செல்போனில் அடிக்கடி பேசியதை தந்தை கண்டித்ததால் ஊர்க்காவல் படைவீரர் தற்கொலை

லால்குடி அருகே செல்போனில் அடிக்கடி பேசியதை தந்தை கண்டித்ததால் ஊர்க்காவல் படைவீரர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-21 23:00 GMT
லால்குடி,

லால்குடி அருகே மணக்கால் சூசையாபுரத்தைச் சேர்ந்தவர் பால்லூர்துசாமி. முன்னாள் ராணுவ வீரரான இவர், வங்கியில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் ராபிபசலிகான்(வயது 24). பட்டய படிப்பு முடித்துள்ள இவர் திருச்சி நெ.1 டோல்கேட் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படைவீரராக பணியாற்றி வந்தார்.

ராபிபசலிகான் வீட்டில் இருக்கும் போது, அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளதாக தெரிகிறது. சம்பவத்தன்று இவர் நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார். அதை பார்த்து கோபமடைந்த பால்லூர்துசாமி தனது மகனை கண்டித்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனமுடைந்த ராபிபசலிகான் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் ராபிபசலிகானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்