தொடர் கொலைகள் எதிரொலி: இன்ஸ்பெக்டர்கள் உள்பட 45 போலீசார் இடமாற்றம் - டி.ஐ.ஜி. அதிரடி நடவடிக்கை

தொடர் கொலைகள் எதிரொலியால் தூத்துக்குடி மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 45 போலீசாரை இடமாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2019-09-20 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலைகள் நடந்து வருகின்றன. இந்த கொலை சம்பவங்களால் மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 5 போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம் செய்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பார்த்திபன் முறப்பநாடு போலீஸ் நிலையத்துக்கும், தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆழ்வார்திருநகரிக்கும், தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தூத்துக்குடி தென்பாகம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், தூத்துக்குடி தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்துக்கும், தூத்துக்குடி வடபாகம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா தூத்துக்குடி தெர்மல் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

அதேபோல், குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்துக்கும், கயத்தாறு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் முத்தையாபுரத்துக்கும், புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரிபாலன் கொப்பம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், முத்தையாபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரிசெழியன் கட்டுப்பாட்டு அறைக்கும், நாசரேத் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் கட்டுப்பாட்டு அறைக்கும் என 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 40 போலீசார் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பிறப்பித்து உள்ளார்.

மேலும் செய்திகள்