அங்கன்வாடி பணியாளர்களுக்கு விலையில்லா செல்போன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு விலையில்லா செல்போன்களை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விலையில்லா செல்போன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி டி.என்.பாளையம் ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 42 பேருக்கு தேசிய ஊட்டச்சத்து குழும திட்டத்தின் கீழ் விலையில்லா செல்போன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, செல்போன்களை வழங்கினார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘இந்த செல்போன்கள் அங்கன்வாடி மைய பணிகளை கண்காணிப்பதற்கு உதவியாகவும், திட்ட அறிக்கைகளை எளிதாக்கவும் பணியாளர்களின் வேலை பளுவை குறைக்கவும் உதவுகிறது’ என்றார். விழாவில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பவானி
பவானி மற்றும் அம்மாபேட்டை பகுதிகளை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா செல்போன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கி, 282 பணியாளர்களுக்கு செல்போன் வழங்கினார்.
இதில், ஈரோடு புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், கவுந்தப்பாடி ஊராட்சி முன்னாள் தலைவர் பாவா.தங்கமணி, உஷா மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 173 அங்கன்வாடி பணியாளர்களுக்கு தமிழக அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் விலையில்லா செல்போன் வழங்கும் விழா கஸ்பாபேட்டை அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி தொகுதி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, செல்போன்களை வழங்கினார்.
விழாவில் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, பழனியம்மாள், கமலம், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ஆர்.பி.கதிர்வேல், சிந்தாமணி கூட்டுறவு சங்க இயக்குனர் கணபதி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் தட்சிணாமூர்த்தி, ஆவின் இயக்குனர் அசோக், குழந்தை வளர்ச்சி திட்ட முதல் நிலை ஒருங்கிணைப்பாளர் சாந்தி கிறிஸ்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.