ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: அரசு பஸ்கள் 2-வது நாளாக ஓடவில்லை; அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக புதுவை அரசு பஸ்கள் 2-வது நாளாக நேற்று ஓடவில்லை. அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்படாததால் போராட்டம் நீடிக்கிறது.;
புதுச்சேரி,
3 மாத சம்பள நிலுவைத்தொகையை வழங்கவேண்டும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளுக்காக நேற்று முன்தினம் பிற்பகல் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அனைத்து தொழிற்சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நேற்று 2-வது நாளாக பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பஸ்கள் சாலை போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சென்னை செல்லும் பயணிகள் பி.ஆர்.டி.சி. பஸ்களில் செல்வதையே அதிக அளவில் விரும்புவார்கள். ஆனால் இந்த பஸ்கள் இயங்காததால் அவர்கள் பிற பஸ்களில் ஏறி சென்றனர்.
இதன் காரணமாக தமிழக அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. கிராமப் புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சாலை போக்குவரத்து கழக பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த பஸ்கள் இயங்காததால் கிராமப்புற மக்கள் அவதியடைந்தனர். இதேபோல் மாகி, திருப்பதி, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளும் பஸ்கள் இயங்காததால் அதிருப்தியடைந்துள்ளனர்.
காரைக்கால் மதகடியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கிளை அலுவலக வாயிலில் நேற்று காலை ஊழியர் சங்கத்தலைவர் சுப்புராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அவர்கள் நிலுவையில் உள்ள 3 மாதங்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 30-ந் தேதிக்குள் ஊதியமும், இதுவரை வழங்கப்படாத தீபாவளி போனசையும் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். ஊழியர்களின் போராட்டத்தால் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல வழித்தடங்களில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை புதுவை வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், சாலை போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் குமார், பொது மேலாளர் ஏழுமலை மற்றும் 11 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் ஷாஜகான், விடுபட்ட 3 மாத சம்பளம் மற்றும் விடுபட்ட போனஸ் ரூ.11 ஆயிரம் நாளை(இன்று) மாலைக்குள் வழங்கப்படும். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்த அமைச்சரவையில் முடிவு செய்யப்படும். ஒப்பந்த தொழிலாளர்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தினக்கூலி ஊழியர்களாக மாற்றப்படுவார்கள் என்று கூறினார்.
இதற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.அதற்கு அமைச்சர் ஷாஜகான் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே அவர் பேச்சுவார்த்தையை கைவிட்டு வெளியேறினார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.