லால்பாக் ராஜா விநாயகர் மண்டலுக்கு 4 கிலோ தங்கம், 80 கிலோ வெள்ளி காணிக்கை ஏலம் விடும் பணி தொடங்கியது

லால்பாக் ராஜா விநாயகர் மண்டலுக்கு 4 கிலோ தங்கம் மற்றும் 80 கிலோ வெள்ளி காணிக்கையாக கிடைத்து உள்ளது.

Update: 2019-09-16 23:00 GMT
மும்பை,

மும்பையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா மண்டலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஏராளமான பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக லால்பாக் ராஜா விநாயகருக்கு செலுத்தினார்கள். மேலும் மண்டலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்களிலும் காணிக்கை பணம் குவிந்தது.

பக்தர் ஒருவர் ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினால் ஆன சாப்பாடு தட்டு, கிண்ணம், டம்ளர், கரண்டிகளை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி இருந்தார்.

இந்த மண்டலுக்கு மொத்தம் 4 கிலோ தங்கம் கிடைத்து உள்ளது. மேலும் 80 கிலோ வெள்ளி பொருட்களும் காணிக்கையாக கிடைத்து இருக்கின்றன. இதுதவிர பக்தர்கள் உண்டியலில் செலுத்திய ரூ.6 கோடியே 5 லட்சம் காணிக்கை பணமும் கிடைத்து உள்ளது.

மண்டலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை ஏலம் விடும் பணி நேற்று தொடங்கியது. காணிக்கை பொருட்கள் ஏலம் விடும் பணி நாளை(புதன்கிழமை) வரை நடக்கிறது.

மேலும் செய்திகள்