பா.ஜனதாவுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால்: சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகி வரும் - சிவசேனா
பா.ஜனதாவுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட சிவசேனா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இந்தநிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா- சிவசேனா கூட்டணி மீண்டும் மலர்ந்தது. அந்த கட்சிகள் சட்டசபை தேர்தலையும் இணைந்து சந்திக்க உள்ளன. எனினும் ஒருவேளை தொகுதி பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் போனால் தேர்தலை தனித்து சந்திக்க சிவசேனா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த கட்சி மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகிறது. இதுவரை மேற்கு மராட்டியம், விதர்பா, மரத்வாடா மண்டலங்களில் உள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. கொங்கன் மற்றும் வடக்கு மராட்டிய பகுதிகளுக்கான நேர்காணல் வரும் 20-ந் தேதிக்குள் முடியும் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மண்டல தலைவர்களை மாதோஸ்ரீயில் சந்தித்து பேசினார். அப்போது உத்தவ்தாக்கரே தேர்தலை தனித்து சந்திக்கவும் தயாராக இருக்குமாறு அவர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் அதற்கான பணிகளை தொடங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
உத்தவ் தாக்கரே எல்லா மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் திட்டங்கள் குறித்து எங்களிடம் கேட்டார். நாங்கள் தற்போது எந்த சூழலிலும் தேர்தலை சந்திக்கும் மனநிலையில் உள்ளோம். கடந்த முறை (2014-ம் ஆண்டு தேர்தல்) இப்படி ஒரு மனநிலையில் இல்லாமல் இருந்தோம். இந்த முறை தேவைப்பட்டால் தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் பா.ஜனதா-சிவசேனா தொகுதி பங்கீடு குறித்து பா.ஜனதா மேல்சபை உறுப்பினர் பிரசாத் லாட் கூறுகையில், ‘‘இரு கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வரும் 19-ந் தேதி நாசிக்கில் வைத்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் வெளியிடப்படலாம்’’ என்றார்.
சிவசேனாவை பொறுத்தவரை பா.ஜனதாவுடன் தொகுதிகளை சரிசமமாக பகிர்ந்து கொண்டு தேர்தலை சந்திக்கும் மனநிலையில் உள்ளது. ஆனால் ஒரு சில பா.ஜனதா தலைவர்கள் சிவசேனாவை விட பா.ஜனதா அதிக இடங்களில் போட்டியிடும் என கூறிவருகின்றனர்.
இது குறித்து கொங்கனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கூறியதாவது:-
‘‘கடந்த பிப்ரவரி மாதம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியது போல பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடும். சிவசேனா இதுவரை யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது. முதல்-மந்திரி சொன்னது போலவே தேர்தலை சந்திப்போம். எனினும் வரும் காலத்தில் கட்சி தலைவர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடப்போம்.’’ இவ்வாறு அவர் கூறினார்.