இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் ஜவாஹிருல்லா அறிவிப்பு

இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.

Update: 2019-09-15 23:00 GMT
திருப்பனந்தாள்,

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்த அறிவிப்பால் பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

திரும்பப்பெற வேண்டும்

எனவே பொதுத்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். இந்தி மொழியை கற்றால் தான் நாடு வளர்ச்சி பெறும் என்கிறார்கள். இந்த கருத்து கண்டனத்துக்கு உரியது. ஒரே நாடு ஒரே மொழி என்ற நிலை உருவானால் இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாசாரம் பாதிக் கப்படும். இந்தியை மக்கள் மீது திணித்தால் அதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் இணைந்து மனித நேய மக்கள் கட்சி போராட்டத்தில் ஈடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான், சலீம், செல்லப்பா, சல்லிநஜீர் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்