போலி முகவரி கொடுத்து செக்யூரிட்டி நிறுவனம் நடத்திய கொள்ளையன் கைது
போலி முகவரி கொடுத்து செக்யூரிட்டி நிறுவனம் நடத்திய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, சித்தாலபாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிராஜன், பள்ளிக்கரணை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கனி, கண்ணன், முத்துசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர், சித்தாலபாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 35) என்பதும், அவர் மீது திருவான்மியூர், அடையாறு, பெசன்ட்நகர் பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் நகைகளை பறித்ததாக 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைதாகி 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதும் தெரியவந்தது.
மேலும் அவர், போலியான முகவரி கொடுத்து, பழைய குற்றங்களை மறைத்து செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதும், அவரிடம் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு இடங்களில் செக்யூரிட்டி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை கண்காணிப்பதுபோல் நடித்து ராஜேஷ் மீண்டும் நகை பறிப்பில் ஈடுப்பட்டு வந்தார். பள்ளிக்கரணை பகுதியில் நடந்த நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ராஜேஷ் மீண்டும் நகை பறிப்பில் ஈடுபடும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து ராஜேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராஜேஷ் நடத்திவரும் செக்யூரிட்டி நிறுவன அனுமதியை ரத்து செய்ய போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.