ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு,
ஈரோட்டில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதைத்தொடர்ந்து மாலையில் வானில் கருமேகங்கள் தோன்றின. மாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை 15 நிமிடங்கள் நீடித்தது. இதனால் பொதுமக்கள் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்தபடி ரோட்டில் சென்றனர். ஈரோட்டில் திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்ட பல்வேறு இடங்களில் சேறும், சகதியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.
புஞ்சைபுளியம்பட்டியில் கடந்த சில நாட்களாகவே காலை முதல் மதியம் வரை வெயில் அடிப்பதும், மாலை நேரங்களில் மேகம் சூழ்ந்து காணப்படுவதுமாக இருந்து வருகிறது. இதனால் மழை பெய்யும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மழை பெய்யாமல் போக்கு காட்டியது.
இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல் மதியம் வரை வெயில் அடித்தது. பின்னர் மதியம் 1.30 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதைத்தொடர்ந்து மழை பெய்யத்தொடங்கியது. மதியம் 2 மணி முதல் 2.30 வரை மிதமான மழை பெய்தது. அதன்பின்னர் குளிர்ந்த காற்றுடன் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
இதேபோல் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் மாலை 6.15 மணி வரை கனமழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. பின்னர் குளிர்ந்து காற்றுடன் சாரல் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை -1, தாளவாடி -1, பவானி -1, ஈரோடு -1.1, கொடுமுடி -2.6, வரட்டுப்பள்ளம் -2.8, குண்டேரிபள்ளம் -3, கோபி -4, கொடிவேரி -8.2, பவானிசாகர் -15.3, அம்மாபேட்டை -19.2, சத்தியமங்கலம் -22, நம்பியூர் -41.