உல்லாஸ்நகரில் மாயமான பெண் பிணமாக மீட்பு தற்கொலையா? போலீஸ் விசாரணை
உல்லாஸ்நகரில் மாயமான பெண் பிணமாக மீட்கப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பர்நாத்,
உல்லாஸ்நகரில் மாயமான பெண் பிணமாக மீட்கப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் உடல் மீட்பு
தானே உல்லாஸ்நகர் போலீஸ் நிலையம் அருகே வால்தூணி கழிமுக மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் பெண் ஒருவரின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை மீ்ட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிணமாக மீட்கப்பட்ட பெண் குறித்து விசாரணை நடத்தினர். இதில், பிணமாக மீட்கப்பட்டவர் உல்லாஸ்நகர் கேம்ப் நம்பர் 4 மகாத்மாபுலே நகரை சேர்ந்த ஷீத்தல் (வயது25) என்பது தெரியவந்தது. இவர் காணாமல் போய்விட்டதாக ஹில்லைன் போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்து இருந்தது தெரியவந்தது.
தற்கொலையா?
மேலும் ஷீத்தலின் கணவர் சச்சின், புனேயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், ஷீத்தலுக்கு கடந்த 12 நாட்களுக்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷீத்தல் தற்கொலை செய்து கொண்டரா? அல்லது விபத்தா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.