விக்கிரவாண்டியில் 766 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
விக்கிரவாண்டியில் நடந்த விழாவில் 766 பேருக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு அரசு துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விக்கிரவாண்டியில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கோட்டாட்சியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட இயக்குனர் மகேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு விக்கிரவாண்டி, காணை, கோலியனூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 766 பேருக்கு மனைப்பட்டா, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மாட்டுக் கொட்டகை அமைப்பதற்கான ஆணை, சூர்ய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், கடந்த 4 ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் 74 ஆயிரம் வீடுகள் பசுமை வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை ஒரு முன்னோடி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு மாதத்தில் மட்டும் 54 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் 920 பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் 2,617 ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணிகள் நடக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பிரம்மதேசம் கூட்டுறவு சங்க தலைவர் எசாலம் பன்னீர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, நாராயணன், தாசில்தார் பார்த்திபன், ஒன்றிய செயலாளர்கள் சிந்தாமணி வேலு, செந்தமிழ்செல்வன், நகர செயலாளர் பூர்ண ராவ், கூட்டுறவு சங்க தலைவர்கள் லட்சுமி நாராயணன், முகுந்தன், சரவணகுமார், நாகப்பன், இயக்குனர்கள் பி.கே.எஸ். சுப்பிரமணி, ரவி, துரை முருகன், ராஜா, பெரியான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.