குப்பையில்லாத நகராட்சிகளாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - மண்டல இயக்குனர் வேண்டுகோள்
குப்பையில்லாத நகராட்சிகளாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
விழுப்புரம்,
தமிழ்நாடு நீடித்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் மூலம் நகராட்சி நிர்வாக ஆணையரகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை கையாளுதல் குறித்த பயிற்சி முகாம் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சிகளில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு விழுப்புரம் நகராட்சி ஆணையர் லட்சுமி தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாக வேலூர் மண்டல இயக்குனர் விஜயகுமார் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து குப்பைகளின் வகைகள், உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல், அளவு மதிப்பீடு, மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான கழிவுகளை வகைப்படுத்துதல், மறுசுழற்சிக்கு பயன்படாத கழிவுகள் குறித்து விளக்கி பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், திடக்கழிவு மேலாண்மையின் நோக்கம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளையும் குப்பையில்லாத நகராட்சியாக மாற்ற வேண்டும் என்பதுதான். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து தர வேண்டும். ஒவ்வொரு நகராட்சியிலும் உள்ள பொதுமக்கள் இதை கடைபிடிக்க வேண்டும். குப்பையில்லாத நகராட்சிகளாக மாற்றுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை.
அதேபோல் துப்புரவு பணியாளர்கள் சுகாதார பணிகளில் ஈடுபடும்போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபடும்போது விஷ வாயு இல்லையென்பதை உறுதி செய்த பின்னரே உள்ளே இறங்க வேண்டும். பாதுகாப்பு கவசங்களுடன் பணியில் ஈடுபட வேண்டும். உரிய பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, துப்புரவு ஆய்வாளர்கள் ரமணன், செல்வராஜ், செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தெருக்களை சுத்தம் செய்தல், நுண் உரக்குடில், குப்பை உருவாகும் இடத்திலேயே உரமாக்கல் மையம், வீட்டிலேயே உரக்குடில் அமைத்தல், தோட்டக்கழிவு மேலாண்மை ஆகியவை குறித்து பயிற்சி அளித்தனர். முடிவில் உதவியாளர் மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.