காந்தி வீதியில் கடையின் கதவை உடைத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள கைக்கெடிகாரங்கள் திருட்டு
புதுவை காந்தி வீதியில் உள்ள தனியார் கடையின் கதவை உடைத்து 50-க்கும் மேற்பட்ட கைக்கெடிகாரங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி,
புதுவை காந்தி வீதியில் பிரபலமான கெடிகார விற்பனை கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்தவுடன் வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். கடையில் இரவுக் காவலாளி பண்ருட்டியை சேர்ந்த சிவபாலன் (வயது 58) பணியில் இருந்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்ததால் சிவபாலன் கடையின் பின்பக்கமாக சென்று தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலையில் அவர் கண்விழித்து கடையின் முன்பக்கம் வந்தபோது கடையின் ஷட்டர் (இரும்பு கதவு) உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் கடையின் மேலாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் கடையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள் மற்றும் பல்வேறு விதமான கைக்கெடிகாரங்களும் திருடப்பட்டிருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர்கள் 2 பேர் கடைக்குள் புகுந்து கெடிகாரங்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
இந்த துணிகர திருட்டு குறித்து கடையின் நிர்வாகி பாஸ்கர் போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து கைக்கெடிகாரங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.